மாணவர்களின் உளவியல் சிக்கல்களைத் தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் - UGC
மாணவர்களின் மனநலம், உளவியல் சிக்கல்களுக்குத் தொலைபேசியில் ஆலோசனை கூறும் மையங்களை அமைக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுச் செயலாளர் ரஜனீஸ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவலைத் தடுக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் மனநலம் பேணவும், உளவியல் சிக்கல்களைத் தீர்க்கவும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தொலைபேசியில் ஆலோசனை கூறும் மையங்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைபேசி, மின்னஞ்சல், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுடன் தொடர்புகொண்டு இறுக்கமற்ற சூழலில் அவர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Prof. Rajnish Jain, Secretary, University Grants Commission (UGC) has written to Vice Chancellors/Principals of all colleges & universities over setting up of help lines for mental health & psychosocial concerns of students in view of #CoronaLockdown. pic.twitter.com/OhsZI1DFOQ
— ANI (@ANI) April 6, 2020
Comments