ரஷ்யா - சவூதி இடையான பேச்சு தாமதமானதால் 20 டாலருக்கும் குறைந்த கச்சா எண்ணெய் விலை
சவூதி அரேபியா, ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் வழங்கல் தொடர்பான பேச்சு தள்ளிப்போவதால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை இருபது டாலருக்கும் குறைவாக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் கச்சா எண்ணெய்த் தேவை குறைந்தது. எண்ணெய் வழங்கலில் சவூதி அரேபியா, ரஷ்யா இடையே ஏற்பட்ட போட்டியால் ஒரு பீப்பாய் 20 டாலர் என்னும் அளவுக்குக் குறைந்தது.
விலை வீழ்ச்சியைத் தடுக்க வழங்கலைக் குறைப்பது தொடர்பாக சவூதி அரேபியா, ரஷ்யா இடையே இன்று நடைபெற இருந்த பேச்சு வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் குறைந்து 19 டாலராக உள்ளது. வியாழனன்று நடைபெறும் பேச்சில் உடன்பாடு ஏற்படாவிட்டால் இம்மாத இறுதியில் கச்சா எண்ணெய் விலை 10 டாலர் என்கிற அளவுக்கு வீழ்ச்சியடையும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Comments