செர்னோபில் அணு உலையை சுற்றி கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாக தகவல்
உக்ரைனில் காட்டுத்தீ காரணமாக செர்னோபில் அணு உலையை சுற்றியுள்ள தடைசெய்யப்பட்ட மண்டலத்தில் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உக்ரைன் சுற்றுச்சூழல் ஆய்வு மைய தலைவர் யெகோர் ஃபிர்சோவ் (Yegor Firsov) தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள பதிவில், செர்னோபில் அணு உலை அருகே சுமார் 250 ஏக்கர் அளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் இயல்பை விட 16 மடங்கு அதிகமாக கதிர்வீச்சு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
விமானங்கள், ஹெலிகாப்டர்கள், 100க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள யெகோர், சுற்றுவட்டார மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments