நாளை மறுநாள் ICMR -க்கு கிடைக்க உள்ள 7 லட்சம் Rapid Antibody Test கிட்டுகள்

0 1714

கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் சுமார் 7 லட்சம் Rapid Antibody Test கிட்டுகள்  நாளை மறுநாள் ICMR  எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவை கண்டுபிடிக்கும் PCR  சோதனை முடிவுகளுக்கு சில தினங்கள் ஆகும் என்பதால், தொற்றை விரைவாக கண்டுபிடிக்க இந்த புதிய சோதனை முறை நடைமுறைக்கு வருகிறது.

கொரோனா வைரஸ் நுழைந்த நபர்களின் ரத்த த்தில் இயற்கையாகவே அதற்கான ஆன்டிபாடீஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த சோதனையில் அது கண்டறியப்பட்டு தொற்று உறுதி செய்யப்படும்.

இந்த Rapid Antibody Test கிட்டுகள் கொரோனா தொற்று அடர்த்தியாக உள்ள இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என ICMR அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments