கூட்டம் கூடிய பொதுமக்களால் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

0 1152

மகாராஷ்டிரத்தில் ஆர்வி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீட்டுமுன் உதவிப் பொருட்கள் வாங்கக் கூட்டம் கூடியது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் வார்தாவில் உள்ள ஆர்வி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாதாராவ் கெச்சே வீட்டில் அவர் பிறந்தநாளையொட்டி உதவிப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இது தொடர்பாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments