கொரோனா நன்கொடைக்காக பட்டேல் சிலையை விற்பதாக விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு

0 1920

கொரோனா தாக்குதலுக்கு நன்கொடை கொடுப்பதற்காக உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் பட்டேலின் சிலையை விற்பதாக விளம்பரம் செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், கெவாடியாவில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒற்றுமை சிலை என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 2 ஆயிரத்து 989 கோடி ரூபாய் மதிப்பில் இந்தச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவமனைகள் கட்டவும், மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளுக்கான செலவை ஈடுகட்டுவதற்காகவும், சுகாதார உபகரணங்கள் வாங்குவதற்காகவும் இந்த சிலை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக OLX வலைதளத்தில் ஒருவர் கடந்த சனிக்கிழமை விளம்பரம் செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து விளம்பரம் செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து குஜராத் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விளம்பரத்தை தனது தளத்தில் இருந்து OLX நிறுவனம் நீக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments