ஊரடங்கால் தெளிந்து காணப்படும் பிலிப்பைன்சை ஒட்டியுள்ள கடல்பகுதி: படையெடுத்துள்ள ஜெல்லி மீன்கள்

0 1835

கொரோனா தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததாலும், மீனவர்கள் வரத்து இல்லாததாலும் பிலிப்பைன்ஸ் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் காணப்பட்டன.

கிருமித் தொற்று காரணமாக பிலிப்பைன்ஸ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருக்களும், சாலைகளும் ஆள்அரவமின்றி காணப்படுகின்றன. கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீனவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டின் கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான இளங்சிவப்பு நிற ஜெல்லி மீன்கள் வலம் வருகின்றன. கடல் தக்காளி என்று அழைக்கப்படும் இந்த வகை ஜெல்லி மீன்கள் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக ஆழ்கடல் பகுதியில் வசிக்கப் பழகி விட்டதாக கடலாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments