கொரோனா கொடூரம் : எகிறும் பாதிப்பு உயரும் உயிர்ப்பலி
இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஐ எட்டி விட்டது.
கொரோனாவின் இன்றைய நிலவரம் குறித்து, டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சகத் தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் விளக்கம் அளித்தார்.
அப்போது, கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஐ எட்டியுள்ளது என்று கூறினார். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 267 பேர் குணம் அடைந்து விட்டதாக லாவ் அகர்வால் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 490 ஆக உயர, பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு, 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். கேரளாவில் 306 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.தெலங்கானாவில் பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக அதிகரிக்க, உயிரிழப்பு 7ஆக உயர்ந்து விட்டது.
உத்தரபிரதேசத்தில் 227 பேரும், ராஜஸ்தானில் 200 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆந்திராவில் 161 பேரும், கர்நாடகாவில் 144 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குஜராத்தில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக கூடி விட்டது.
நாடு முழுவதும் 274 மாவட்டங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments