நாட்டில் 75 லட்சம் பேருக்கு உணவளிக்கும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள்
நாடு முழுவதும் 75 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு அரசும் தொண்டு நிறுவனங்களும் உணவு வழங்கி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள், வீடற்றவர்களுக்காக நாடு முழுவதும் 27 ஆயிரத்து 661 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பன்னிரண்டரை லட்சம் பேர் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசுத் துறையினர் ஒன்பதாயிரத்து 951 இடங்களிலும், தொண்டு நிறுவனங்கள் ஒன்பதாயிரத்து 509 இடங்களிலும் உணவு சமைத்து வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 13 லட்சத்து 60 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களே தங்குமிடமும் உணவும் வழங்கியுள்ளதாகவும் புண்ய சலிலா தெரிவித்தார்.
Comments