ஈரோட்டில் 1.09 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

0 1730

ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பெல் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ராட்சத கிருமிநாசினி தெளிக்கும் வாகனம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 29 ஆயிரத்து 814 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 09 ஆயிரத்து 818 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments