ஊரடங்கால் நீதிமன்றப் பணிகள் நிறுத்தம் - அவசர வழக்குகளை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதிகள்

0 1250

ஊரடங்கு விலக்கப்பட்ட பின் நீதிமன்ற பணிகளை தொடங்குவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளிடம் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துக்களை கோரியுள்ளது.

ஊரடங்கால் நீதிமன்றப் பணிகள் நிறுத்தப்பட்டு அவசர வழக்குகளை மட்டும், நீதிபதிகள் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பனின் சுற்றறிக்கையில் ஏப்ரல் 14-ஆம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால் பணிகளை படிப்படியாக தொடங்குவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் புதுச்சேரி முதன்மை நீதிபதி ஆகியோர் நாளைக்குள் கருத்துக்களை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. நாளை மறுநாள் இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்க இருக்கும் வீடியோ கான்ஃபரன்ஸ் விவாதத்தில் பங்கேற்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments