நிறுத்தப்பட்ட CBSE தேர்வுகளை நடத்தத் திட்டம் தயார் - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்
நிறுத்தப்பட்டுள்ள தேர்வுகளை நடத்தத் திட்டம் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்ட நிலையில் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கடைப்பிடிப்பதால் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகளை நடத்தத் திட்டம் தயாராக உள்ளதாக அமைச்சர் ரமேஷ்போக்ரியால் தெரிவித்துள்ளார். ஊரடங்கு விலக்கப்பட்டபின் இதற்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஏற்கெனவே நடந்த தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பாடங்களை இணையத்தளம் வழியாகக் கற்பிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Plan ready for conducting pending exams, evaluation once the lockdown is lifted: HRD Minister
— Press Trust of India (@PTI_News) April 5, 2020
Comments