தடையை மீறி ராமநவமி விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

0 1772

ராஜஸ்தானில் ராமநவமி விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மதம் சார்ந்த அனைத்துக் கூட்டங்கள், விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தில் ராம்நகர் என்னும் ஊரில் ராமநவமிக்கு மறுநாள் நடைபெற்ற விழாவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

இதேபோல் கடந்த வாரம் பத்ராச்சலம் கோவிலில் நடைபெற்ற ராமநவமி விழாவில் தெலங்கானா அமைச்சர்கள் அல்லோல இந்திராகரன், புவ்வடா அஜய்குமார் ஆகியோர் கலந்துகொண்டதும் குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments