8 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் கொரோனா ஆய்வகம்

0 3055

புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் ஒப்புதலுக்குப்பின், ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

தமிழகத்தில் கொரோனா சமூக தொற்றாக மாறிவிடாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உணர்வால் ஒன்றிணைந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு, தமிழக மக்களை, அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments