சென்னையில் வீடுதோறும் சளி, காய்ச்சல் பரிசோதனையில் 16,000 ஊழியர்கள்
கொரோனா பாதிப்புகளை கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கையாக சென்னையில் வீடுதோறும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவா என பரிசோதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் 100 வீடுகளுக்கு ஒரு குழு வீதம் 16 ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வுப் பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளது. அவற்றை அணியாமல் யாரும் பணியாற்றக்கூடாது என்றும், மீறினால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு ஆய்வுப் பணிகள் 90 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments