இந்திய விமானிகளுக்குப் பாகிஸ்தான் பாராட்டு

0 2054

ஐரோப்பாவுக்கு நிவாரணப் பொருட்களையும் வெளிநாட்டவரையும் ஏற்றிச்சென்ற ஏர் இந்தியா விமானிகளுக்குப் பாகிஸ்தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிக்கித் தவித்த ஐரோப்பிய நாட்டவர்களையும், நிவாரணப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் பாகிஸ்தான் வான்பரப்பில் சென்றபோது, கராச்சியில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அசலாமு அலைக்கும் எனக் கூறி வரவேற்றுள்ளனர்.

தொற்றுநோய் பரவி வரும் நிலையிலும் நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் உங்களைக் கண்டு நாங்கள் பெருமையடைகிறோம் எனப் பாராட்டிள்ளனர். அதற்கு ஏர் இந்தியா விமானியும் மிக்க நன்றி எனத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments