கொரோனா: Rapid Antibody Test-க்கு மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி

0 7039

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அதை வேகமாக கண்டுபிடிக்கும் உத்தியான Rapid Antibody Test க்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

ரத்தத்தில் கொரோனா வரைசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என்பதை கண்டு பிடிப்பதே இந்த பரிசோதனை முறையாகும். 15 முதல் 30 நிமிடங்களுக்குள் முடிவு தெரியும். இந்த சோதனை பாசிட்டிவ் ஆக வந்தால், வழக்கமான தொண்டை, மூக்கு மாதிரி சோதனை வாயிலாக அது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். காய்ச்சல், இருமல், ஜலதோஷம் என வரும் அனைத்து நபர்பகளுக்கும் ரேபிட் சோதனை நடத்தப்படும். அதில் கொரோனா இல்லை என தெரியவந்தாலும் அவர்கள் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். தொற்று வேகமாக பரவுவதை கண்டுபிடித்து சமயோசித நடவடிக்கைகளை எடுக்க இந்த Rapid Antibody Test பரிசோதனை உதவும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments