புகையிலைப் பொருட்களை மெல்லவும் துப்பவும் வேண்டாம்- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு அறிவுறுத்தல்
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை மெல்லவும் துப்பவும் வேண்டாம் எனப் பொதுமக்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளோரின் சளி, மூச்சுக்காற்று, உமிழ்நீர் ஆகியவற்றால் பிறருக்குத் தொற்று பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொற்று பரவுவதைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ளும்படி மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்த அறிவுறுத்தலுக்கு மாறாகப் புகையிலைப் பழக்கம் உள்ளோர் அவற்றை மென்று சுவைப்பதுடன், பொது இடங்களில் எச்சில் துப்பியும் வருவதால் நோய்த் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், புகையிலைப் பொருட்களை மெல்லவும் துப்பவும் வேண்டாம் எனப் பொதுமக்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
Comments