ஊரடங்கினாலும் அடங்காது ஆட்டம் போட்ட கன்னட நடிகை
கன்னட நடிகை ஷர்மிளா மந்தரே கார்விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கு அமலில் இருக்கும் போது நண்பர்களுடன் பார்ட்டியில் மது அருந்தி காரை ஓட்டியதால் அதிகாலை 3 மணிக்கு பெங்களூரின் வஸந்த் நகர் பாலத்தின் கீழ் உள்ள தூணில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் இருந்த நடிகையும் அவர் ஆண் நண்பரும் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் தாமாகவே ஷர்மிளா மந்தரே மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென ஒருவர் தாம் கார் டிரைவர் என்றும் காரை ஷர்மிளா ஓட்டவில்லை என்றும் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார்.
Comments