ஏப்ரல் 8 - நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

0 1994

நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் வரும் 8-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். 

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமாக குறைந்த பட்சம் 5 எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வரும் 8-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கொரோனா பாதிப்பு தொடர்பான விவகாரங்கள், ஊரடங்கால் பல்வேறு தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நாட்டின் பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments