ஜலந்தரில் வீடுகளில் இருந்து இமயமலையை கண்ட மக்கள்
ஊரடங்கால் தொழிற்சாலைகளின் புகை போக்கிகள் மூச்சு விடுவதை நிறுத்திக் கொண்டதாலும், வாகனங்கள் சாலைகளில் இருந்து காணாமல் போனதாலும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகர மக்களுக்கு ஒரு அபூர்வ காட்சி இன்று தென்பட்டது.
இதுவரை காற்றின் மாசு படலம் மறைத்து வைத்திருந்த இமயமலையின் பனிச் சிகரங்களை முதன்முதலாக வீட்டில் இருந்தே காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் ஜலந்தர் மக்கள். ஊரடங்கால் போரடித்து இருந்தவர்கள் இந்த காட்சியை வலைதளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜலந்தரில் வசிக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இப்படி ஒரு காட்சியை தனது வீட்டில் இருந்து காண்பேன் என கனவிலும் நினைக்கவில்லை என டுவிட்டரில் மகிழ்ந்துள்ளார்.
When people of #Jalandhar saw #Dhauladhar range first time ever. Dhualdhar’s mountain ranges lies at a distance of 213 kms from Jalandhar. This is how pollution made us blind !! PC Net. pic.twitter.com/Q0qNmaybJw
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 3, 2020
Never seen Dhauladar range from my home rooftop in Jalandhar..never could imagine that’s possible..clear indication of the impact the pollution has done by us to Mother Earth ?.. this is the view pic.twitter.com/laRzP8QsZ9
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 3, 2020
Comments