கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்களுக்கு மருத்துவக் காப்பீடு - பஞ்சாப் மாநில அரசு
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் 50 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்வதாகப் பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு 50 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பஞ்சாபில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் 50 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
Comments