மார்ச் 24ல் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

0 14750

 கடந்த மாதம் 24ஆம் தேதி டெல்லியிலிருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் பயணித்தவர்கள் பயணம் செய்த தேதியில் இருந்து கணக்கிட்டு 28 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6E 2403 என்ற இண்டிகோ நிறுவன விமானத்தில் வந்தவர்களும் 15 - 765 என்ற எண் கொண்ட ஏர் ஏசியா விமானத்தில் வந்தவர்களும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம் மருத்துவ உதவிக்கு 044 - 2538 4520 என்ற எண்ணுக்கோ 044 - 4612 2300 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments