110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை

0 2809

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, 110 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக சுகாதாரத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், இந் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலின்படி, சென்னையில் பெருங்குடி- ஜெம், அடையார் மலர், தரமணி வி.எச்.எஸ், மயிலாப்பூர் சி.எஸ்.ஐ கல்யாணி, மியாட், விஜயா ஆகிய மருத்துவமனைகளும், கோவையில் கே.ஜி மற்றும் கொங்குநாடு மருத்துவமனை ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளன.

மதுரையில் வேலம்மாள், சேலத்தில் விநாயகா மிஷன், திருவள்ளூரில் ஏ.சி. எஸ் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா , வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை உள்ளிட்டவைகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  மொத்தம் 37 மாவட்டங்களிலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க எந்தெந்த தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்ற முழு விவரமும், சுகாதாரத்துறையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

hospital

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments