வேளாண்துறை பாதிக்கப்படாமல் இருக்க மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு
வேளாண்மையும் அதைச் சார்ந்த தொழில்களும் தடையின்றி நடைபெற மேலும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில், விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஊரடங்கு அறிவிக்கையில் நான்காவது திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வேளாண் கருவிகள், உதிரிப்பாகங்கள் விற்பனையகம், பழுது பார்ப்பகம் ஆகியவற்றைத் திறந்து வைக்கலாம். வேளாண் விளைபொருள் கொண்டுசெல்வதற்கு வசதியாக நெடுஞ்சாலையோரங்களில் உள்ள லாரி பழுது பார்க்கும் பணிமனைகள், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருக்கலாம்.
தேயிலைத் தோட்டங்கள் 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம்.
Comments