கொரோனா தடுப்பு: அதிகாரம் பெற்ற குழுக்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்ட அதிகாரம்பெற்ற குழுக்களின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிடவும், அவற்றை முறைப்படி அமல்படுத்துவதை உறுதிப்படுத்தவும் அதிகாரம்பெற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவமனைகள், தனி வார்டு வசதிகள், தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்புகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தார். மாஸ்க், கையுறைகள், வென்டிலேட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ கருவிகள் தயாரிப்பு, விநியோகம், கொள்முதல் போதிய அளவில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
PM @narendramodi chaired a joint meeting of the Empowered Groups constituted for planning and ensuring implementation of COVID-19 response activities in the country.
— PMO India (@PMOIndia) April 4, 2020
Prime Minister's office: PM Modi chaired joint meeting of Empowered Groups constituted for planning&ensuring implementation of #COVID19 response activities in country. He reviewed countrywide preparedness regarding availability of hospitals,proper isolation&quarantine facilities. pic.twitter.com/l4dOUVyevu
— ANI (@ANI) April 4, 2020
Comments