கொரோனாவை பரப்புவது போல் டிக்டாக் செய்த நபர் கைது
கொரோனாவை பரப்புவது போல் சித்தரித்து ரூபாய் நோட்டில் மூக்கை சிந்தியபடி டிக்டாக் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகன் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், கொரோனாவை இந்தியாவிற்கு வரவேற்பதாகவும், தீர்வு இல்லாத இந்த நோய்ப்பரவல் புனிதமான தண்டனை என்றும் குறிப்பிட்டு டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டிருந்தார்.
அதில் கொரோனாவை பரப்புவது போல் சித்தரித்து ரூபாய் நோட்டில் மூக்கு வாய் பகுதிகளை துடைப்பது போல் நடித்திருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், வீடியோவை பரப்பியவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.
Comments