பணம் எடுப்பதற்காக ஏடிஎம் செல்லும் தேவையை குறைக்கும் அஞ்சல்துறை சேவை
ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், பணம் எடுப்பதற்காக ஏடிஎம் செல்லும் தேவையை குறைத்து, கட்டணம் ஏதுமின்றி வீடு தேடி பணத்தை கொண்டு வந்து கொடுக்கும் மகத்தான சேவையை இந்திய அஞ்சல்துறை வழங்கி வருகிறது.
Aadhar enabled Payments Services - AePS எனும் அந்த சேவையை, அஞ்சல் துறை வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மட்டுமின்றி பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பெற முடியும். வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை இணைத்தவர்கள், அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு வேண்டிய தொகையை கூறினால், 24 மணி நேரத்தில் அஞ்சல்காரர் வீடு தேடி பணத்தைக் கொண்டு வருவார்.
அவரிடம் இருக்கும் Postman செயலியில், வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரும் OTP மற்றும் கைவிரல் ரேகையை உள்ளீடு செய்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஓராண்டாகவே பயன்பாட்டில் இருக்கும் இந்த சேவை ஊரடங்கு காலத்தில் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. இந்த சேவையின் மூலம் நாளொன்றுக்கு 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முடியும்.
மேலும் அறிய https://www.npci.org.in/product-overview/aeps-product-overview
Comments