காய்ச்சலுடன் வந்த 2 பேருக்கு கொரோனா...108 பேருடன் தனிமைபடுத்தப்பட்ட மருத்துவமனை

0 2616

டெல்லி மருத்துவமனைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியானதால், அவர்கள் வந்தபோது மருத்துவமனையிலிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 108 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

சர் கங்கா ராம் ((Sir Ganga Ram)) மருத்துவமனைக்கு 4 நாள்களுக்கு முன்பு காய்ச்சலுடன் 2 பேர் சிகிச்சைக்கு வந்தனர். கொரோனா அறிகுறிகள் இல்லாத போதிலும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. 2ஆவது பரிசோதனையில், 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், 2 பேருடன் மருத்துவமனையில் நேரடி தொடர்பில் இருந்த 108 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அதில் 23 பேர்  மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எஞ்சிய 85 பேரை அவர்களது வீடுகளிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments