ஆட்டம் காட்டும் கொரோனா... 75 ஆக உயர்ந்தது, உயிரிழப்பு ...!
டெல்லி - தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஆயிரத்து 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்பு - 75 - ஐ எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, 11 - வது நாளாக நீடிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து, தலைநகர் டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர் வால், தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஆயிரத்து 23 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றார். இது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் என கூறிய அவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 22 ஆயிரம் பேர், தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்தது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19. தமிழகத்தில் 485 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி 445 பேரும், கேரளாவில் 295 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 174 பேரும், ஆந்திராவில் 161 பேரும், தெலங்கானாவில் 158 பேரும் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்பு 75 ஐ எட்டியுள்ளது. 183 பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் அறிய : https://www.mohfw.gov.in/
Comments