தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதற்காக 58,440 வழக்குகள் பதிவு - 48,945 வாகனங்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதற்காக 58 ஆயிரத்து 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 48 ஆயிரத்து 945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
64 ஆயிரத்து 733 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் 18 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 134 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னையில் 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் தொடர்புடைய 162 இருசக்கர வாகனங்கள், 2 இலகு ரக வாகனம் மற்றும் 6 ஆட்டோக்கள் என மொத்தம் 170 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Comments