தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் ரூ. 14 கோடியே 32 லட்சம் கொரோனா நிவாரண நிதி
கொரோனா தடுப்பு பணிக்காக போக்குவரத்துத்துறையின் சார்பில், சுமார் 14 கோடியே 32 லட்சம் ரூபாய், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக அத்துறையின்
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலை வெளியிட்டார்.
போக்குவரத்து துறையின் சார்பில் 14 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரத்து 938 ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கொரனோ வைரஸ் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட வருவாய் துறை, காவல்துறை, சுகாதார துறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரனோ நோய் தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பான ஆலோசனை செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் 20 பேர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். 19 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் கிசிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 20 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.
கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேர் வசிக்கும் பகுதிகளை சுற்றியுள்ள பொது மக்களுக்கு சளி, காய்ச்சல் இருக்கிறதா என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் 6000 பேர் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் சந்தைகள் மூடப்பட்டு 35 வாகனம் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்யப்பட்டுள்ளது..
ஆட்சியர் மூலம் இறைச்சி கடைகள் மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையில் இது வரை
728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிவாரண நிதியாக பொதுமக்களிடம் இருந்து தாமாக முன்வந்து 42 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளனர்.
போக்குவரத்து கழகங்கள் மூலமாக பணம் 14 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 938 ரூபாய் வழங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து கழகங்களில் பணியாற்றுபவர்களின் ஒரு நாள் சம்பளம்
1746 பேர் ஒரு நாள் 21 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
ஆக மொத்தம் போக்குவரத்து துறையின் சார்பில் 14 கோடியே 31 லட்சத்து 75 ஆயிரத்து 938 ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 45 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 17 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொரனோ தொற்றுடன் வந்ததால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1627 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், 472 பேர் சரியாகி வீடுகளுக்கு சென்றுள்ளனர் என்றார்.
Comments