அதிவிரைவு கொரோனா பரிசோதனை விரைவில் வெளியிடுகிறது மத்திய அரசு
கொரோனாவை கண்டுபிடிக்கும் அதிவிரைவு ரத்த சோதனையான rapid antibody test குறித்த வழிகாட்டல் நடைமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தொண்டை மற்றும் மூக்குப் பகுதி திரவங்கள் எடுக்கப்பட்டு நடத்தப்படும் கொரோனா பரிசோதனை நடைமுறை உள்ளது. இதில் முடிவு தெரிய சில தினங்கள் ஆகும் என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையிலான rapid antibody test நடைமுறைக்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் மூலம் 15 முதல் 30 நிமிட நேரத்திற்குள் முடிவு தெரியும் என்பதுடன் அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையிலான சிறப்புக் குழு இந்த சோதனை நடைமுறைகள் குறித்து கடந்த 3 நாட்களாக விவாதித்து வருகிறது.
Comments