இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் கொரோனாவால் உயிரிழப்பு - நியூயார்க் ஆளுநர் தகவல்

0 4250

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், ஒரே நாளில் இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் 562 பேர் உயிரிழந்திருப்பதாக, அம்மாநில ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக நியூயார்க் மாநிலத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு இதுவரை 3 ஆயிரத்து 218 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையே 24 மணி நேரத்தில் 562 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இரண்டரை நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்திருப்பதாக நியூயார்க் ஆளுநர் Andrew Cuomo தெரிவித்துள்ளார். இதற்கடுத்தபடியாக, நியூஜெர்சி, மிச்சிகன், கலிஃபோர்னியா, மசாசூசெட்ஸ், லூசியானா, ஃபுளோரிடா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments