ஊரடங்கு உத்தரவால் வீடியோ கால் மூலம் நடைபெற்ற திருமணம்

0 1294

ஊரடங்கு உத்தரவு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், வீடியோ கால் மூலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்திய அளவில் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் வெளியே செல்ல அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடைபெற்ற இஸ்லாமிய முறைப்படியான திருமண நிகழ்ச்சியில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்ள, பெண் தனது பெற்றோர் வீட்டில் இருந்தவாறே வீடியோ கால் முறையில் பங்கு பெற்றுள்ளார்.

தொடர்ந்து, மதகுருமார்கள் மணமகன் - மணமகள் இருவரிடமும் சம்மதம் கேட்டு, திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments