கொரோனா தொற்று குறித்து நாளை முதல் வீடு வீடாக ஆய்வு
கொரோனா தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுக்க, யாருக்கேனும் சளி காய்ச்சல் இருக்கிறதா என நாளை முதல் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் வீடுகள் உள்ளிட்ட பத்து லட்சம் கட்டிடங்களில், 100 வீடுகளுக்கு ஒரு குழு என நியமித்து தினந்தோறும் ஆய்வு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
16 ஆயிரம் ஊழியர்கள் நாளை முதல் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என்றும், 90 நாட்களுக்கு இந்த கண்கானிப்பு தொடரும் என்றும் அவர் கூறினார். இதேபோல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
துப்புரவு பணிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பதற்கான அனைத்து பொருட்களும் கையிருப்பு உள்ளன என்றும், ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் முகக் கவசம், கிளவுஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், அவை இல்லாமல் யாரும் பணியாற்றக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
Comments