கொரோனா பரவலைத் தடுக்க WHO அறிவுரை
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுக்க வேண்டும் என அனைத்து நாடுகளையும் உலக நலவாழ்வு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 5 வாரங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு பெருகியுள்ளதாகவும், அனைத்து நாடுகளையும் சென்றடைந்துள்ளதாகவும் உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கிப்ரெயீசஸ் (Tedros Adhanom Ghebreyesus) வலியுறுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் குறைந்த எண்ணிக்கையில் பரவியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
Comments