உலக அளவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தை தாண்டி அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி அதிகரித்து வருகிறது.
பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பலியானோர் எண்ணிக்கை அடிப்படையில் இத்தாலி முதலிடத்திலும் உள்ளது.உலக அளவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 88 ((11,30,088)) ஆக உள்ளது. இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 23 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 60 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடிப்படையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 124,736 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயின் இரண்டாம் இடத்தில் உள்ளது. 1,19,827 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலி மூன்றாம் இடத்தில் உள்ளது. ஜெர்மனி, ஃபிரான்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சீனா 6ஆம் இடத்தில் உள்ளது. சீனாவில் 81,639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும், 76 ஆயிரத்து 755 பேர் மீண்டுவிட்ட நிலையில், ஆயிரத்து 558 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் பலி எண்ணிக்கையும் 3,326 என்ற அளவில் உள்ளது.
அதேசமயம், பலி எண்ணிக்கை பட்டியலில் 14,681 உயிர்களை காவுகொடுத்து இத்தாலி முதலிடத்தில் உள்ளது. 11,744 என்ற பலி எண்ணிக்கையுடன் ஸ்பெயின் இரண்டாம் இடத்தில் உள்ளது. 7,403 என்ற பலி எண்ணிக்கையுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது. 6,507 உயிரிழப்புகளுடன் ஃபிரான்ஸ் 4ஆம் இடத்திலும், 1,275 உயிரிழப்புகளுடன் ஜெர்மனி 5ஆம் இடத்திலும் உள்ளது.அதிக உயிர்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில், ஈரான், பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. பிரிட்டனில் சீனா, ஈரானை காட்டிலும் உயிரிழப்புகள் அதிகம்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடிப்படையில், துருக்கி, சுவிட்சர்லாந்து நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் இருந்தபோதிலும், பலி எண்ணிக்கை 600-க்கும் குறைவாகவே உள்ளது.உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
Comments