டாட்டா விடுதிகளில் மருத்துவர்கள் தங்க இடம்

0 1766

டாட்டா குழுமம் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள் தனது சொகுசு விடுதிகளில் தங்குவதற்கு இடமளித்துள்ளது.

டாட்டா குழுமத்தின் ஓர் உறுப்பான இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனிக்கு மும்பையில் தாஜ்மகால் பேலஸ், ஜிஞ்சர் ஓட்டல், தாஜ் லேண்ட்ஸ் எண்ட் உள்ளிட்ட 5 சொகுசு விடுதிகள் உள்ளன.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்குவதற்கு இந்த விடுதிகளில் இடமளிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தின் அருகிலேயே தங்குவதால் தொலைவில் உள்ள வீடுகளுக்குச் சென்றுவரும் அலைச்சல் குறைந்து மருத்துவப் பணியாளர்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.

தங்களால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்கிற அச்சமும் தவிர்க்கப்படுகிறது. முதல் உலகப்போரின்போது தாஜ்மகால் பேலஸ் விடுதி 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments