அனைத்து மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைத்தால் மின்தொகுப்பு பாதிக்கப்படும்- மகாராஷ்டிர மின்துறை அமைச்சர் நிதின் ராவுத்
அனைத்து மின்விளக்குகளையும் ஒரே நேரத்தில் அணைத்தால் மின்தொகுப்பு பாதிக்கப்படும் என மகாராஷ்டிர மின்துறை அமைச்சர் நிதின் ராவுத் தெரிவித்துள்ளார்.
கொரோனா எனும் இருள் அரக்கனை விரட்ட ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மின்விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு 9 நிமிடங்களுக்கு மெழுகுத்திரி விளக்குகளையும் அகல்விளக்குகளையும் ஏற்றி வைக்க வேண்டும் எனப் பொதுமக்களைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரே நேரத்தில் எல்லா மின்விளக்குகளையும் அணைத்தால் மின்தொகுப்பில் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அப்படிக் கோளாறு ஆனால் சீரமைக்க ஒருவாரக் காலம் ஆகும் எனவும் மகாராஷ்டிர மின்துறை அமைச்சர் நிதின் ராவுத் தெரிவித்துள்ளார். அதனால் மின்விளக்குகளை அணைக்காமலேயே மெழுகுத்திரி விளக்கும், அகல் விளக்கும் ஏற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments