தேவிந்தர் சிங்கின் காவலை ஏப்ரல் 10 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி தேவிந்தர் சிங்கின் காவலை ஏப்ரல் 10 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவிந்தர் சிங், தனது காரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தீவிரவாதி நவீது பாபு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அல்தாஃப் ஆகியோருடன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, கூடுதல் விசாரணை நடக்கவிருப்பதால் காவலை நீட்டிக்குமாறு காவல்துறை தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து தேவிந்தர் சிங்கின் காவலை வரும் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி முனீர் மார்கன் உத்தரவிட்டார்.
Comments