கொரோனா வைரஸ் எப்படி பரவியிருக்கக் கூடும்..? என்ன சொல்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்
மனிதர்களின் சுவாசம் மற்றும் ஒருவருக்கொருவர் பேசுவதால் மூலமே கொரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ நிலைக்குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வில், குறிப்பிட்ட வைரஸ் அல்ட்ராபைன் எனப்படும் அடர்த்தியான பனிமூட்டம் நிறைந்த காற்றில் வெகுநேரம் நின்று பரவுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மும்பையில் உள்ள தாராவி போன்ற மிகவும் நெரிசலான பகுதியில் கொரோனா தொற்று இருப்பது மிகவும் கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது, சுமார் 2 மீட்டர் சுற்றளவில் மற்ற பொருட்களின் மீது நீர்த்திவலைகள் படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்திவலைகள் இருக்கும் பொருளை மற்றவர்கள் தொட்ட பின்னர் தங்கள் கைகளை கண், மூக்கு மற்றும் வாய்பகுதியை தொடுவதால் வைரஸ் உடலுக்குள் சென்று விடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Comments