சமூக இடைவெளி சாத்தியமில்லாத நிலையில் நோய்ப்பரவுமோ என பீதி

0 1997

மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா பரவியதையடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

ஒருவர் உயிரிழந்து மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நெருக்கமாக மக்கள் வசிக்கும் வீடுகளில் கொரோனா பரவக்கூடும் என்பதால் அனைவரும் வீடுகளுக்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மிகச்சிறிய அறைகளில் மிக அதிகமான மக்கள் வசிப்பதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும், அரசு அத்தியாவசிய தேவைகளை அளித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் மருத்துவமனைகள், மருத்துவர்கள் எப்போது வேண்டுமானாலும் உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அப்பகுதி வாசிகள் கோருகின்றனர். தாங்களாகவே அந்தப் பகுதியில் வருவோரையும் வெளியேறுவோரையும் கண்காணித்து வரும் தாராவி மக்கள் புதிய நபர்கள் உள்ளே வர வேண்டாம் என்றும் கோருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments