கொரோனா பிரச்சினையை அரசியலாக்க விருப்பம் இல்லை -மம்தா பானர்ஜி

0 1414

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை அணைக்க பிரதமர் மோடி விடுத்த கோரிக்கைக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

பிரதமரின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிட தாம் விரும்பவில்லை என்று கூறிய அவர் இப்பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

காணொலி மூலமாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, தாம் மக்களின் உயிர்கள் தொடர்பான பிரச்சினையை அரசியலாக்காமல் கொரோனா வைரசை வெல்வது எப்படி என்பதில் கவனம் செலுத்துவதையே விரும்புவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments