தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதிச் சீட்டுகளை பெற சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமானோர் திரண்டனர்

0 2637

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல வழங்கப்படும் அனுமதி சீட்டை பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டனர்.

ஊரடங்குக்கு இடையே திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை, உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டும் வெளியூர் செல்ல அவசர கால அனுமதி வழங்கப்படுகிறது.

வட்டாட்சியர்களிடம் அனுமதி பெற வகை செய்யப்பட்டிருந்த நிலையில் பலர் பொய்யான காரணங்களை கூறி அனுமதி பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சியின் குறிப்பிட்ட அலுவலகங்களிலும் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுமதியைப் பெற ரிப்பன் மாளிகை வந்த ஏராளமானோர் நெருக்கியடித்து நின்றதால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தினர். ஆனால் முந்திச் செல்வதற்காக மக்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments