கொரோனா நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 9 வேளை உணவு !

0 6301

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் வைரஸ் தொற்று அறிகுறியுடன் சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டுகளில் தங்கி, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு,  நாளொன்றுக்கு 9 வேளை, சிறப்பு உணவு, வழங்கப்பட்டு வருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்படும் இந்த உணவு பட்டியலின் படி, காலை 7.30 மணிக்கு, பார்லி கஞ்சி, மிளகு சூப் -  காலை 8.15 மணிக்கு ரொட்டி, சாம்பார் சட்னியுடன் இட்லி, பொங்கல் -  9. 30 மணிக்கு சோயா பால்  விநியோகிக்கப்படும்.

11.30 மணிக்கு சுண்டல், அவித்த முட்டை, வாழைப்பழம், ஆரஞ்சு பழமும், 12. 30 மணிக்கு கீரை ,காய்கறி கூட்டுகளுடன் சாம்பார் சாதம், தயிர் சாதமும் கொடுக்கப்படும்.

மாலை 4 மணிக்கு எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள் கலந்து சூப், அவித்த முட்டை விநியோகிக் கப்படும்.  5.30 மணிக்கு தேநீர் - இரவு 7 மணிக்கு வெங்காயம் அல்லது தேங்காய் சட்னி யுடன் கேரட், பீன்ஸ் கலந்த கிச்சடி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments