தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி : பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு

0 18763

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று வரை, 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் புதிதாக 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மொத்தம் 3 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2 ஆயிரத்து 789 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

484 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 411 பேரில், 7 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் என மொத்தம் ஆயிரத்து 580 பேர், தற்போது மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமை வார்டுகளில் மொத்தம் 23 ஆயிரத்து 689 படுக்கைகளும், 3 ஆயிரத்து 396 வென்டிலேட்டர்களும் உள்ளன. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகளுக்கு, கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments