கொரோனா பரவும் ஆபத்து ? சென்னையில் 8 இடங்கள் சீல் : போலீசார் கண்காணிப்பு

0 12942

சென்னையில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்த பகுதிகளில், 8 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் 46 பேர் இது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்றிற்கு மேற்பட்டோர் வசித்த பகுதிகள் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலை உள்ளதால் அந்த பகுதிகள் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு தடுப்புகள் மூலம் சீலிடப்பட்டுள்ளது.

சென்னையில் புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவித்து அந்த பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளின் எல்லைகளை மூடி காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்ட போலீசார் கட்டுக்குள் உள்ளது.

சென்னை புதுப்பேட்டை பகுதியில், சுமார் 2500 வீடுகள் உள்ள 35 தெருக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு தெருவிலிருந்து மற்ற தெருவுக்கு செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுப்பேட்டை பகுதியில், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, மாநகராட்சி அறிவுறுத்தலின் பேரில் இந்த பகுதி முழுவதும் தீவிர கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதேபோல, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளே நுழைந்து சோதிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதன் முறையாக ட்ரோனில் ஒலிப்பெருக்கி பொருத்தி அப்பகுதிவாசிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்படுவதாகவும், போலீசார் கூறியுள்ளனர்.

மற்ற பகுதிகளை போல் அத்தியாவசிய தேவைக்காக கட்டுப்படுத்தபட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியில் வருவதிலும் கட்டுப்பாடு உள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரம் இயங்கும். அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

வேறு ஏதும் தேவை என்றால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் பூர்த்தி செய்யப்படும். அவசர மருத்துவ சிகிச்சையை தவிர மற்ற எந்த காரணங்களுக்காகவும் அப்பகுதியினர் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments