காசியாபாத் மருத்துவமனை நோய்த்தடுப்புக் காவலில் தப்லீக் உறுப்பினர்கள்

0 2465

தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள்  நோய்த்தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள காசியாபாத் மருத்துவமனையில் பெண் மருத்துவப் பணியாளர்களோ, பெண் காவல்துறையினரோ பணிக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

நேற்று இந்த மருத்துவமனையில் பெண் மருத்துவப் பணியாளர்களிடம் சில தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அவமரியாதையாக நடந்தனர் என்ற புகார் எழுந்தது. 

இது தொடர்பாக 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாக யோகி ஆதித்ய நாத் தெரிவித்திருக்கிறார். 

குறிப்பிட்ட 6 பேரையும் மனித இனத்தின் எதிரிகள் என வர்ணித்துள்ள அவர், இவர்கள் சட்டத்தை மதிக்கவும், ஏற்கவும் தயாராகாதவர்கள் என்பதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments