அமேசான் காட்டில் வசிக்கும் பழங்குடியின பெண்ணுக்கு கொரோனா

0 24616

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் வனத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்ணுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பெரும் பகுதி பிரேசிலில் தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச சமூகத்தை பேரச்சத்தில் ஆழ்த்தியிருக்கும், கொரோனா தொற்றுநோய், தற்போது அமேசான் காடுகளிலும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இந்த வகையில், கொலம்பியா நாட்டோடு எல்லையை பகிர்ந்துகொள்ளும், பிரேசிலின் சாண்டோ ஆண்டனியோ மாவட்டத்திற்குட்பட்ட வனத்தில் வாழும் கோகமா (Kokama) பழங்குடியின இனத்தை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம் பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளராக பணியாற்றும் அப்பெண், அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments